Monday, August 13, 2018

நிதிச்சுமையில் இருந்து மீட்க ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு உதவி...!

வர்த்தக ரீதியாக நலிவடைந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் பத்தாம் தேதி கடந்த பின்னரும் ஊழியர்களுக்கு ஊதியத்தை தர முடியவில்லை.

ஏர் இந்தியாவை மீட்கும் நடவடிக்கையாக மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்து, 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிலீசித்து வருகிறது. 

பிரதமர் மோடி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏர் இந்தியாவுக்கு நிதியுதவியளிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், வேறு எந்த விவரத்தையும் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
SHARE:

0 comments: