Thursday, August 2, 2018

கந்தக அமில கசிவால் 2 பேர் காயம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குபதிவு

SHARE:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவால் 2 பேர் காயமடைந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கு கந்தக அமிலக் கசிவு தொடர்பான தகவலை அடுத்து அமிலத்தை அகற்றும் பணி நடைபெறுகிறது. 

நேற்று பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களான ஜெய்சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர், ஒரு வால்வில் ரசாயன அமிலம் இல்லை என அளிக்கப்பட்ட உறுதியின் பேரில் அதனை திறந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அதில் இருந்த ரசாயனம் கொட்டி உடல் வெந்துபோன நிலையில் ஜெய்சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லேசான காயம் அடைந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 

இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த இன்டெக் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனர் பிரேம்குமார், மேற்பார்வையாளர்கள் இளவரசன், முத்துராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
SHARE:

0 comments: