Thursday, August 2, 2018

டென்மார்க்கில் பர்தா தடைச் சட்டத்தை எதிா்த்து ஆர்ப்பாட்டம்!


டென்மார்க்கில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியத்தடை செய்யும் புதிய சட்டத்தை எதிர்த்து, 1300 வரையான டென்மார்க் மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த நாட்டில் இருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவர் முகத்தை மறைத்திருந்தால் எதிரே உள்ளவரை அவமதிப்பதாகக் கருதப்படும். 

எனவே முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் மசோதா டென்மார்க் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 

இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சட்டம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி அந்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

போராட்டத்தில் பங்கேற்றவர்களும் தங்களின் முகங்களை மறைத்துக் கொண்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். 

அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தண்டப்பணத்தை அறிவிட்ட பின்னா் வீடுகளுக்கு விரையும்படி அறிவுறுத்துமாறு அந்நாட்டு நீதியமைச்சர் சொரன் பெப் போல்சன் தெரிவித்துள்ளார். 

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் தடைச் சட்டமானது, பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் கடந்த மே மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. 

மதச்சார்பற்ற குடியரசு விழுமியங்களைக் கட்டியெழுப்பும் நோக்கம் உட்பட பாதுகாப்பு செயற்பாடுகளின் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: