Wednesday, August 1, 2018

இண்டிகோ விமானத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை உயிரிழப்பு!

share :

இண்டிகோ விமானத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது. 

நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து பாட்னா புறப்பட்ட 6E 897 என்ற விமானத்தில் ஆண் குழந்தை ஒன்றுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக விமானம் அவசர அவசரமாக ஐதராபாத்துக்குத் திருப்பப்பட்டது. 

விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்களைத் தயார் நிலையில் வைக்குமாறு விமானி அறிவுறுத்தியிருந்தார். 

அதன்படி, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
share :

0 comments: