Wednesday, August 1, 2018

பிரதமர் தலைமையில் சம்பந்தன் உட்பட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்...!

share :

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம், தற்போது அலரிமாளிகையில் நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எப்போது நடாத்துவது, எந்த முறையில் நடாத்துவது என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்படுகிறது.

இதில், இரா. சம்பந்தன், மனோ கணேசன், டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கடந்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
share :

0 comments: