Thursday, August 2, 2018

அமைச்சர் - பிரதி அமைச்சர்கள்- பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் அதிகரிப்பு..!! எவ்வளவு தெரியுமா?


அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் குறித்த கொடுப்பனவுகள் அனைத்தும் 215 விகிதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க, கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் பாங்கற்றலுடன் கடந்த யூலை மாதம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு, 54 ஆயிரத்து 285 ரூபாய் - ஒரு இலட்சத்து 20 ஆயிரமாகவும், பிரதி அமைச்சர்கள் 63 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு 65 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
SHARE:

0 comments: