Sunday, August 12, 2018

இம்ரான்கான் பதவியேற்க்கும் விழாவில் பங்கேற்கவில்லை - சுனில் கவாஸ்கர்

SHARE:
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புறக்கணிக்கிறார்.

வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தனது நண்பர்கள் கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகிய 3 பேருக்கு மட்டும் இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வர்ணனை பணிக்காக இங்கிலாந்து செல்ல வேண்டியிருப்பதால், இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி இம்ரானிடம் தெரிவித்து விட்டதாகவும் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறியுள்ளார். கபில்தேவ், சித்து ஆகிய இருவரும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்த போதும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
SHARE:

0 comments: