Wednesday, August 8, 2018

புகையிரதம் நிறுத்தப்பட்டதால் கொழும்பில் பரபரப்பு


புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து, இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சம்பள பிரச்சினையை உட்பட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணி புறக்கணிப்பு நடவடிக்கையில், ரயில் நிலைய பொறுப்பதிகாரி, சாரதி, காவலர், கட்டுப்பாட்டாளர்கள் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக, ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போராட்டம் காரணமாக, ஸ்தமித்தமடைந்த பயணிகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Tense situation in Colombo Fort Railway station, Sudden Trains Strike continues. Commuters demanding trains
SHARE:

0 comments: