Wednesday, August 1, 2018

மருத்துவமனையில் கருணாநிதி: அஜித்தின் சர்ப்ரைஸ் விசிட்!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினர் பலர் நேரில் சென்றும் தொலைப்பேசி வாயிலாகவும் விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இவரை தொடர்ந்து இன்று காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வந்தார். 

நடிகர் விஜயை தொடர்ந்து அஜித் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் உட்பட யாருக்கும் தகவல் கொடுக்கப்படவில்லை. 

மருத்துவமனை வந்த நடிகர் அஜித், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தார். 

இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படத்தில் அஜித், திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசிக்கொண்டிருக்கிறார். உடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
SHARE:

0 comments: