Thursday, August 2, 2018

யாழ்.கோட்டை இராணுவத்திற்கு தடை செய்யப்பட்ட பிரதேசம் என்று வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது

யாழ்ப்பாணம், கோட்டை பிரதேசம் இராணுவத்திற்கு தடை செய்யப்பட்ட பிரதேசம் என்று வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று இராணுவத் தளபதி லுதினல் ஹெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். 

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். 

இராணுவத் தளபதி லுதினல் ஹெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். 

யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்தில் இலங்கை இராணுவம் நீண்ட காலமாக இருக்கின்றது. கோட்டைக்குள் இராணுவம் இருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல என்று அவர் கூறினார். 

இங்கிருந்து இராணுவம் வௌியேறுவதற்காக விஷேட காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
SHARE:

0 comments: