Tuesday, August 7, 2018

கலைஞர் கருணாநிதி மறைவிற்கு மைத்திரி – மஹிந்த இரங்கல்

SHARE:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. 

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் ” தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை. அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உற்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவில் சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி மண்டபத்திற்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: