Thursday, August 2, 2018

இலவச பிரியாணி சண்டை - ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

திமுக-வினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் திமுகவினரால் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கிஷோர், ராம் கிஷோர், சுரேஷ், கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளான பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவருடன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்
SHARE:

0 comments: