Friday, August 3, 2018

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட்கோலி

SHARE:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட்கோலி பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அஷ்வினின் சுழலில் தடுமாறியது. 

அஷ்வின் 4 விக்கெட் கைப்பற்ற, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழந்து 285 ரன்களுடன் இருந்தது. 

கரன் 24 ரன், ஆண்டர்சன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்கொண்டு 2 ரன் சேர்த்த நிலையில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கரன் (24) முகமது ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அ

தைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், தவான் ஜோடி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. பிராடு, ஆண்டர்சன் வேகத்தை எளிதாக சமாளித்த இவர்கள், 10 ஓவருக்கு பிறகு பந்துவீச வந்த சாம் கரனின் வேகத்தில் ஆட்டம் கண்டனர். 14வது ஓவரில் முரளி விஜய் (20) விக்கெட்டை வீழ்த்திய கரன் அதே ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் (4) விக்கெட்டையும் கைப்பற்றினார். அதோடு நிற்காமல், தனது அடுத்த ஓவரில் தவானை (26) வெளியேற்றினார். 

கரனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அசத்தலாக பந்துவீசி ரகானே (15), தினேஷ் கார்திக் (0) விக்கெட்டுகளை வீழ்த்தினார். 50 ரன் வரை விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி 100 ரன்னில் 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. 

இந்நிலையில், கேப்டன் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா அணியை மீட்க கடுமையாக போராடியது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாண்டியா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி தனி ஆளாக போராடி 149 ரன்கள் குவித்து ரஷித் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் சொதப்புவார் என்ற விமர்சனங்களுக்கு தனது துடுப்பாட்டம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் விராட்.
SHARE:

0 comments: