Friday, August 3, 2018

ஒரு சில காட்சிகளில் நடித்தாலும், நினைவில் நிற்கும் காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன் ; டாப்சி

share :
ஆடுகளம் படத்தில் அறிமுகமானபோது, பொம்மை போல் வந்து சென்ற, வெள்ளாவி தேவதை டாப்சி, இப்போது பாலிவுட்டில், 'பிசி'யான நடிகையாகி விட்டார். அதிலும், பிங்க் படத்தில் நடித்ததற்கு பின், முன்னணி நடிகையாகி விட்டார்.

ஹிந்தியில், பெரும்பாலான நடிகையர், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதால், கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆள் இல்லாமல் போய் விட்டது. இந்த குறையை, தற்போது டாப்சி தான் போக்குகிறார்.

'அழுது வடியும் கேரக்டர்களிலும், கவர்ச்சி பொம்மையாகவும் நடிக்க விரும்பவில்லை. அதற்கு எல்லாம், அதிகமான நடிகையர் உள்ளனர். ஒரு சில காட்சிகளில் நடித்தாலும், ரசிகர்களின் நினைவில் நிற்கும் காட்சிகளில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்' என்றார், டாப்சி.
share :

0 comments: