Thursday, August 2, 2018

இலவச பிரியாணி கேட்டு தாக்குதல் நடத்திய திமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்


சென்னை விருகம்பாக்கத்தில் இலவசமாக பிரியாணி கேட்டு தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு சென்ற திமுகவினர் இருவர் இலவசமாக பிரியாணி வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு கடை உரிமையாளர் மறுக்கவே ஆத்திரமடைந்த திமுகவினர் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும், தடுக்க வந்த கடை ஊழியர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் திமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் , விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்!pic.twitter.com/Y5PdjGjeMI

— M.K.Stalin (@mkstalin) August 1, 2018
SHARE:

0 comments: