Sunday, August 12, 2018

ஹன்சிகாவின் 50வது படம் மஹா

தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகானவர் ஹன்சிகா. அதன்பிறகு வேகமாக வளர்ந்த அவர், தற்போது ஐம்பதாவது படத்தை எட்டிப்பிடித்து விட்டார். அதோடு அப்படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார் ஹன்சிகா.

அப்படி ஹன்சிகா நடிக்கும் 50வது படத்தை ஜமீல் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டீல் ஹன்சிகாவின் பிறந்த நாளில் வெளியிடுவதாக இருந்தது. 

ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இறந்த விட்டதால் டைட்டில் அறிவிப்பை தள்ளி வைத்தனர். அதோடு ஜூலை 11-ந்தேதி மாலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் மஹா என்பது வெளியிடப்பட்டுள்ளது . தனுஷின் டுவிட்டரில் வெளியானதால் அவரது ரசிகர்களும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

SHARE:

0 comments: