Sunday, August 12, 2018

கிறிஸ் வோக்ஸ் - ஜொனி பார்ஸ்டோ அதிரடி: வலுவான நிலையில் இங்கிலாந்து! 250 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியா

share :

இந்தியாவிற்கு எதிரான இரண்டாது டெஸ்ட் போட்டியில், கிறிஸ் வோக்ஸ் அதிரடி சதம் காரணமாக, இங்கிலாந்து அணி வலுவான நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, கிறிஸ் வோக்சின் அபார சதத்தினால் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், 4 விக்கட்டுக்கள் மீதமிருக்க 250 ஓட்டங்களினால் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கிறிஸ் வோக்ஸ் , ஜொனி பார்ஸ்டோ ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து 131 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில், ஜோடி சேர்ந்த இருவரும் தமக்கிடையே, 189 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இங்கிலாந்து அணி 320 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஜொனி பார்ஸ்டோ 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் கிறிஸ் வோக்ஸ், ஆட்டமிழக்காது 120 ஓட்டங்கைளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில், மொஹமட் சமி 3 விக்கட்டுக்களையும், ஹர்திக் பாண்டிய 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஜேம்ஸ் என்டர்சனின் துல்லியமான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 107 ஓட்டகளில் சுருண்டது.

இந்திய அணியை திணறடித்த என்டர்சன் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்மான இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில், கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
share :

0 comments: