Sunday, August 12, 2018

விமானம் விபத்து: 12 வயது சிறுவனை தவிர மற்றவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

SHARE:
இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில்,12 வயதுச் சிறுவன் மட்டும் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் Tanah Merah என்னுமிடத்தில் இருந்து Oksibil என்னுமிடத்துக்குச் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது.

இந்நிலையில் குறித்த விமானம் Oksibil விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இதன் போது, அவ் விமானத்தில் 2 விமானிகளும் 7 பயணிகளும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் சென்ற 8 பேர் உயிரிழந்ததாகவும், 12வயதுச் சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
SHARE:

0 comments: