Saturday, August 4, 2018

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் போதையில் இருந்தார்களா....! பொலிஸாரின் பொய் அம்பலமானது...!

SHARE:

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தும் போது போதையில் இருந்தனர். 

இவ்வாறு வழங்கப்பட்ட பொலிஸாரின் குற்றச்சாட்டு பொய்யானது என தகவலறியும் சட்டத்தின் மூலம் மரண விசாரணை அறிக்கை வெளியானது. 

மேலும், அவர்களை நிறுத்துமாறு எச்சரித்தும் மீறி சென்றதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் கூறினாலும், மோட்டார் சைக்கிளை செலுத்திய சுலக்ஷனின் மார்புப் பகுதியருகே துப்பாக்கி ரவை நுழைந்திருப்பதாக மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினாலேயே நடராஜா கஜன் உயிரிழந்திருப்பதாக மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.



SHARE:

0 comments: