Sunday, August 12, 2018

ஜோர்தான் பொலிஸாரின் திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலி

SHARE:
ஜோர்டான் தலைநகர் அம்மானில் பொலிசார் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் தலைநகர் அம்மானில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பொலிசார் அம்மானில் உள்ள சால்ட் நகரில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதி, அங்கு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
SHARE:

0 comments: