Wednesday, August 15, 2018

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...! பரிதாபமாக ஒருவர் பலி..!

கிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய இராணுவ வாகனம் வீதி விதிகளை மீறி தவறான பாதையூடாக பயணித்திருந்தாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் 51 வயதான குகனேஸ்வரன் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

1 comment: