Monday, August 13, 2018

'பியார் பிரேமா காதல்' படத்தின் அசத்தலான ஓப்பனிங் வசூல்..!

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. 

இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே சமூக வலைத்தளங்களில் பரவிய பாசிட்டிவ் ரிசல்ட் அடுத்த காட்சியை ஹவுஸ்புல் ஆக்கியது.

இந்த படம் சென்னையில் 17 திரையரங்குகளில் 178 காட்சிகள் திரையிடப்பட்டு கடந்த வாரயிறுதி நாட்களில் ரூ.68,72,236 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் கூடியிருந்தனர்.

இளைஞர்களின் முழு ஆதரவை இந்த படம் பெற்றுள்ளதால் சின்ன பட்ஜெட் படமான இந்த படம் வணிக ரீதியில் மிகப்பெரிய லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
SHARE:

0 comments: