Sunday, August 12, 2018

121 க்குள் தென் ஆபிரிக்காவை சுருட்டிஇலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி...!

SHARE:
தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், அதன் அணித்தலைவர் குயின்டன் டிகொக் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றாா்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர் அகில தனஞ்ஜெய 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




SHARE:

0 comments: