Wednesday, August 1, 2018

டோனியால் முடியாததை விராட் செய்து சாதிப்பாரா?


இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடக்க உள்ள நிலையில் டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி சாதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 

டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி சாதிப்பாரா- இன்று முதல் டெஸ்ட் தொடக்கம் பர்மிங்காம்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இதன் 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்கியது. 

டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே. 

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அஜீத் வடேகர், கபில்தேவ், ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் மட்டுமே தொடரை வென்றுள்ளது. 

கடைசியாக இங்கிலாந்தில் ஆடிய 2 டெஸ்ட் தொடரிலும் தோல்வியே ஏற்பட்டது. டோனி தலைமையிலான அணி 2011-ல் 0-4 என்ற கணக்கில் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. 2014-ல் 1-3 என்ற கணக்கில் இழந்தது. டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி முத்திரை பதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 

அவரது ரன் குவிப்பை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது. இங்கிலாந்து அணி கடைசியாக பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது. 

இந்திய அணி கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது. #ENGvIND #INDvENG
SHARE:

0 comments: