Tuesday, September 25, 2018

கிளிநொச்சியில் புதிய விவசாய கிணறுகளை அமைக்க 103 மில்லியன் ரூபாய் நிதி தேவை!

கிளிநொச்சி மாவட்டத்தில் 259 புதிய விவசாயக் கிணறுகளை அமைப்பதற்கும், 202 வரையான விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக புதிய விவசாயக் கிணறுகள், கைவிடப்பட்ட மற்றும் சேதமடைந்த விவசாயக் கிணறுகளை புனரமைக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றன.

இது தொடர்பில் விவசாயிகளால் புதிய கிணறுகளை அமைத்து தருமாறும், அதேபோன்று சேதமடைந்த கிணறுகளை புனரமைத்து தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்,

‘கிளிநொச்சி மாவட்டத்தில் 259 வரையான விவசாயக்கிணறுகளின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கான மதிப்பீடாக 77 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.

இதேபோன்று 202 வரையான விவசாயக்கிணறுகளை புனரமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றன. இதற்காக 26 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு புதிய விவசாயக் கிணறுகளை அமைப்பதற்கும், சேதமடைந்த கைவிடப்பட்ட கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE:

0 comments: