Tuesday, September 18, 2018

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய விமானம் சிரியாவில் மாயம் !!

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய விமானமானது சிரியாவின், மத்திய தரைக்கடல் பகுதியில் வைத்து, ரேடார் தொடர்பினை இழந்து காணாமல் போயுள்ளதாக ரஷ்ய நாட்டு ஊடகங்கள தெரிவித்துள்ளன. 

சிரியா கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 35 கிலோமீற்றர் தொலைவில் வைத்து மத்திய தரைக்கடலில் வைத்து இந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதனால் விமானத்துக்கு என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

இதேவ‍ேளை சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையிலே இந்த ரஷ்ய போர் விமானம் காணாமல் போனமையினால் அது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன் இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியா இராணுவம் சுட்டு வீழ்த்தும் போது தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. 

இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: