Thursday, September 6, 2018

16 கிலோ கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு காரில் 16 கிலோ கேரளா கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்த 5 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஊழல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஏ. சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் வைத்து இரு கார்ககளையும் நிறுத்தி சோதனையிட்டபோது காருக்குள் மறைத்து எடுத்து வந்த 16 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்ததுடன் இரு கார்கள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE:

0 comments: