Monday, September 24, 2018

விபத்தில் பரிதாபமாக 2 மாத குழந்தை பலி!

ஹபராதுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

நேற்று (23) மாலை மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோட்டர் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன ஓட்டுனர், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் மற்றும் 2 மாத குழந்தை ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கலஹே பகுதியை சேர்ந்த சஹஸ்யா அமந்தி எனும் 2 மாத குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE:

0 comments: