Tuesday, September 25, 2018

396 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இந்தியா அணியின் தலைவராக டோனி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகின்றது.

டுபாயில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியானது எம்.எஸ்.டோனி தலைமையில் களமிறங்கினற அதேவேளை ஆப்கானிஸ்தான் அணி அஸ்கார் தலைமையில் விளையாடவுள்ளது.

மேலும் கடந்த 696 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இந்தியா அணியின் தலைவராக டோனி விளையாடுகின்றார்.

அத்துடன் இந்த போட்டி அவர் தலைமை தாங்கும் 200 ஆவது போட்டியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


SHARE:

0 comments: