Tuesday, September 4, 2018

தலைமுடி அழகால் இணையத்தை கலக்கும் 5-வயது சிறுமி!

Mia Aflalo என்னும் 5 வயது மாடல் அழகி தனது நீளமான முடி அழகால் தற்போது 63.8k பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளார்!

குழந்தைகள் என்றால் அழகு, அதிலும் சற்று வித்தியாசமாக இருந்துவிட்டால் விட்டு விடுவோமா என்ன?... அப்படி தான் தற்போது Mia Aflalo எனும் சிறுமி இணையவாசிகளை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இந்த சிறுமி தனது நீளாமான முடியினை கொண்டு பல்வேறு சிகையளங்காரங்களை இணையம் மூலம் அறிமுகம் செய்து வருகின்றார். இதற்காக இவரது சிகை அளங்கார நிபுணர் Sagi Dahari இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றார்.

தனது புண்ணகையால் அனைவரையும் கவர்ந்துவிடும் Mia Aflalo இதுவரை யாரிடமும் பிரச்சணைகள் செய்ததில்லை. மிகவும் அமைதியான பெண். இதன் காரணத்தாலே இவரது வீடியோவில் இவரது குழந்தை தன்மை இயல்பாக வெளியாகி பார்பவர்களை அனைவரையும் கவர்ந்துள்ளார்.


தற்போதைய நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் விடியோகளுக்கு ரகிர்களாக கிட்டத்தட்ட 63.8k பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

முன்னதாக ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை சான்சோ, தான் பிறக்கும் போதே அதிக அளவு முடிகளை கொண்டு பிறந்து இணையத்தை தன் பக்கம் சுண்டி இழுத்தார். சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார்பகிர்ந்து வருகின்றனர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் குவியும் ரசிகர்களின் எண்ணிக்கையும் இதுவரை குறையவில்லை.

0 comments: