Thursday, September 6, 2018

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது அண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது அண்டு நிறைவு விழா இன்று இடம்பெற உள்ளது. 

72வது அண்டு நிறைவு விழாவை பிரதமரும், அந்தக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் முக்கியமான அரசியல் கட்சி என்பதுடன், 1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது. 

டி.எஸ். சேனாநாயக்க 1948ம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். 

´வேலை செய்யும், வேலை செய்த 72´ என்ற தொனிப் பொருளில் 72வது அண்டு நிறைவு விழா நடைபெற உள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

0 comments: