Sunday, September 16, 2018

ஒரு கையால் மட்டுமே துடுப்பெடுத்தாடிய வீரர்: சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டுக்கள்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் கை விரலில் ஏற்பட்ட காயத்தால் நாட்டுக்காக ஒரு கையால் மட்டுமே துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆசிய கிண்ண போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பமானது. இதில் முதலாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் சுரங்க லக்மால் வீசிய பந்தை எதிர்கொண்ட போது காயம் ஏற்பட்டது.

இதனால் ஆட்டத்தின் இடை நடுவில் சென்ற தமிம் இக்பால், அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது மீண்டும் ஆடுகளத்திற்குள் நுழைந்து அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தார்.

நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் அவர் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் ஆசிய கிண்ண தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறியுள்ளார்.

0 comments: