Tuesday, September 25, 2018

தலைவர் பதவி பறிபோனதும் - அணியில் இருந்தும் தூக்கி எறியப்பட்ட மத்தியூஸ்...! தேர்வு குழுவின் அறிவிப்பு

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான அஞ்சலோ மத்தியூஸை எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் இணைக்கப்பட மாட்டார் என தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதாகவும் அஞ்சலோ மத்தியூஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அணி தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 வருடங்களாக தனது ஓட்ட சராசரியை 59 ஆக வைத்திருக்கும் மத்தியூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த தென் ஆபிரிக்க அணியுடனான போட்டியிலும் அட்டமிழக்கத்து 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: