Tuesday, September 18, 2018

சமையல் எரிவாயு மற்றும் சீனியின் விலை நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்வு - அரசாங்கம்

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பால்மாவின் விலை குறைப்பு - எரிவாயுவின் விலை அதிகரிப்பு

வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக சந்தையில் எரிவாயு விலை, அமெரிக்க டொலருக்கு ஒப்பிடுகையில் ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.



SHARE:

0 comments: