Wednesday, September 19, 2018

ஜனாதிபதி கோட்டா படுகொலை சதி: பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்கின்றார் டலஸ்!

ஜனாதிபதி மற்றும் கோட்டாபயவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை நேர்மையாக விசாரிக்க முடியாவிட்டால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இருவரது கொலை அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவிற்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் தரவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, பொலிஸ் திணைக்களத்தால் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதி பொலிஸ் மா அதிபருக்கான இடமாற்றமானது குறித்த ஆதாரத்தை அழிக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் திறமையான மற்றும் நம்பகமான அதிகாரிகள் இருப்பதை நாங்கள் அறிவோம்.

அவர்கள் இந்த முறையை சரியான முறையிலேயே நடத்த முடியாது என்றாலும், அவர்களது நற்பெயரை நிலை நிறுத்துவதற்கு இராஜினாமா செய்வது நல்லது” என்றும் அவர் கூறினார்
SHARE:

0 comments: