Wednesday, September 19, 2018

இந்தியாவின் பந்து வீச்சாளர்களை சமாளிக்கமுடியாமல் சொற்ப ஓட்டத்திற்குள் சுருண்டது பாகிஸ்தான்

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் ஐந்தாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் நிலை குழையச் செய்தனர்.

மூன்று ஓட்டங்களுக்கு 2 முக்கிய விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு சொயிப் மலிக் மற்றும் பாபர் அசாம் ஆகிய வீரர்கள் சற்று நம்பிக்கையளித்தனர்.

எனினும் குறித்த இருவரும் முறையே 43, 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி தடுமாற ஆரம்பித்தது.

இதற்கமைவாக பாகிஸ்தான் 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் புவனேஸ் குமார் மற்றும் கேதர் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன், பும்ரா 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்தநிலையில் 163 என்ற வெற்றியிலக்கினை நோக்கி இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களம் இறங்கவுள்ளது.
SHARE:

0 comments: