Wednesday, September 19, 2018

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 167.4125 ஆக பதிவாகியுள்ளது.

இருப்பினும் கடந்த வாரம் ரூபா 163.87 ஆக இருந்த அதன் பெறுமதியே இந்த நிலையை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதுடன், தனியார் பேருந்து கட்டணங்களும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: