Tuesday, September 4, 2018

கொல்கத்தாவில் பலம் இடிந்து கோர விபத்து...! 5 பேர் பலி

கொல்கத்தாவின் மாஜர்ஹாத் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 4 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் கார்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

கொல்கத்தாவில் இதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


SHARE:

0 comments: