Tuesday, September 4, 2018

சிம்புவுடன் இணையும் மேகா ஆகாஷ்!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த, ஒரு பக்க கதை படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். 

அதன்பிறகு கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தாமதமாகி வருகின்றன.

இதற்கிடையே அதர்வாவுடன் மேகா ஆகாஷ் நடித்துள்ள பூமராங் திரைக்கு வரத்தயாராகி விட்ட நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 165ஆவது படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து, சிம்பு நடிக்கும் படத்தில் இணைகிறார் மேகா ஆகாஷ்.

தெலுங்கில் பவன்கல்யாண் - சமந்தா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான அதரின்டிகி தரடி படம், தமிழில் ரீமேக் ஆகிறது. 

சுந்தர்.சி இயக்குகிறார். இந்த படத்தில் பவன் கல்யாண் வேடத்தில் சிம்பு நடிக்க, சமந்தா வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

தமிழில் நடித்த படங்கள் வெளிவராத நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் மேகா ஆகாஷ்.
SHARE:

0 comments: