Thursday, September 13, 2018

ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவித்தல்....

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மதத்திற்கு பின்னர் பிரித்தானியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும் என்றால் சர்வதேச சாரதி அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் “உங்களுடைய ஓட்டுநர் உரிமம் இனிமேல் செல்லுபடியாகாது” அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது பிரித்தானியாவில் உள்ள சில அஞ்சலகங்களில் 5.50 யூரோ கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: