Wednesday, September 19, 2018

எப்பிரச்சினைக்கும் ஐ.தே.க தலைமை தீர்க்கமான முடிவை எடுத்ததில்லை – அசாத் சாலி

நாட்டில் எவ்வித பிரச்சினை ஏற்பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் ஆணைக்குழு அல்லது செயற்குழுவை அமைத்து வருகின்றதே அன்றி எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் தலைவர் அசாத் சாலி குற்றம் சாட்டினார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை, பிணை முறி விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றினை கொண்டு வந்து விசாரித்தது அதனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தங்களுக்கு தேவையானவர்களேயே அந்த குழுவில் நியமித்து காப்பாறிக்கொள்கின்றனர்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் பாரிய மாற்றம் வேண்டும், தலைமை மாற வேண்டும் என அக் கட்சியின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். ஆனால் அக்கட்சியில் தலைமைக்கு ஏற்றவகையில் சகாக்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2030 இல் தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்படும் என தெரிந்தும் அவர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது நாடாளுமன்றம் வரை நடந்துவந்து மாற்றிக்கருத்தில்லாமல் அவருக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தெரிவித்தனர்.

ஆனால் இறுதியில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். அவ்வாறு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியினர் அதற்கு பின்னர் வாய் திறக்கவில்லை” எனவும் தெரிவித்தார்.
SHARE:

0 comments: