Tuesday, September 25, 2018

'விஸ்வாசம்' பாடல் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து முடிப்பதில் இசையமைப்பாளர் டி.இமான் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இந்த படத்தில் பாடலாசிரியர் அருண்பாரதி பாடல்களை எழுதியுள்ளார். 

இவர் தனது சமூக வலைத்தளத்தில் 'விஸ்வாசம்' பாடல்கள் அனைத்தும் இமான் சார் இசையில் சிறப்பாக முடிந்து விட்டது என்று பதிவு செய்துள்ளார். 

எனவே இந்த படத்தின் பாடல்கள் பணி முற்றிலும் முடிந்துவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

மேலும் தல அஜித்தின் அறிமுக பாடலில் தான் எழுதியுள்ள முதல் இரண்டு வரிகளையும் பாடலாசிரியர் அருண்பாரதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

அந்த வரிகள் 'எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல' என்பது ஆகும். 'ஆலுமா டோலுமா' பாடல் போல் இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE:

0 comments: