Monday, September 17, 2018

இந்தியாவில் நாய்களுக்கான பூங்கா

இந்தியாவில்  முதன்முறையாக ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா திறப்புக்குத் தயாராகியுள்ளது.

செல்லப்பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்துணர்வு தரும் வகையிலும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி சாதனங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

த கென்னல் கிளப் ஒஃப் இந்தியாவின் ( The Kennel Club of India ) அனுமதி சான்றிதழ் பெற்ற இந்த பூங்கா விரைவில் நாய்களுக்காகத் திறக்கப்படவுள்ளது. அதே பூங்காவில் பூனைகளுக்கான ஒரு சிறப்பு பகுதியையும் அமைக்க உள்ளதாக ஐதாராபாத் பெருநகர மாநகராட்சியின் மண்டல ஆணையர் ஹரி சந்தனா தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: