Tuesday, September 25, 2018

பழி தீர்க்கப்படுவதற்காக டயானா கொலை செய்யப்பட்டார்: புதிய சர்ச்சை!

இளவரசி டயானா பழி தீர்க்கப்படுவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்படவுள்ள புத்தகம் ஒன்றிலேயே இந்த அதிர்ச்சி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarah Whalen என்ற எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில், பாரீஸிலுள்ள Pont de l’Alma சாலையிலுள்ள சுரங்கப்பாதையில் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு கார் விபத்தில் இளவரசி டயானா மோசமாக காயமடைந்ததாகவும், அவர் இரத்தம் முழுவதும் வெளியேறி மெதுவாக சாக விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் அரசராக இருந்த எட்டாம் ஹென்றியின் மனைவிகளான Anne Boleyn மற்றும் Catherine Howard ஆகியோர் கொல்லப்பட்டது போலவே டயானாவும் கொல்லப்பட்டதாக Whalen தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே பிரித்தானிய பெண்கள் முதுகில் குத்தப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள் என கூறும் Whalen, இங்கிலாந்தில் மிக நீண்ட காலமாகவே மனிதர்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என கூறியுள்ளார்.

தனக்கு நடப்பவற்றைக் குறித்து வெளியில் சொல்ல டயானா திட்டமிட்டிருக்கிறார், ஆனால் அதை அவர் மறைக்கவில்லை.

எப்போதும் அவர் ஊடகங்களை சந்தித்து வந்திருக்கிறார் என்கிறார் Whalen. டயானா இறக்கும் வரை பல முறை கார் விபத்துகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கும் Whalen, அது டயானா குறிவைக்கப்பட்டதற்கு ஆதாரம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த தகவலானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
SHARE:

0 comments: