Tuesday, September 25, 2018

மஹிந்தவை அடுத்து இன்று சீ.ஐ.டியில் முன்னிலையாகின்றார் சரத் பொன்சேகா...!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர் சரத் பொன்சேகா குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள மேலதிக விசாரணைகளில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று(25) மதியம் 12 மணிக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை தொடர்பிலான புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறித்த திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அன்றைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூர்யவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: