Tuesday, September 18, 2018

விக்ரம் - கீர்த்தி சுரேஷ் குரலில் 'மெட்ரோ ரயில்' பாடல் வெளியானது!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாம-2 திரைப்படம் இம்மாதம் 21-ஆம் நாள் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மெட்ரோ ரயில் என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
விக்ரம் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர். படப்பிடிப்பு தொடங்கியதும் த்ரிஷா திடீரென்று ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைப்பெற்ற 'சாமி 2 or சாமி ஸ்கொயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் ஹரி திரைப்படத்தின் கதையானது, பெருமாள் சாமி குடும்பத்திற்கும், ஆறுமுகசாமி குடும்பத்திற்கு இடையே தொடரும் பகையினை மையமாக கொண்டு உறுவாக்கப்பட்டுள்ளது என படத்தின் கதையினை தெரியப்படுத்தினார்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள மெட்ரோ ரயில் என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலினை தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி இசையமைக்க, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளனர்!
SHARE:

0 comments: