Tuesday, September 25, 2018

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மஹாநாம, பியசேனவிற்கு பிணை - நீதிமன்றம்!

President's former Chief of Staff IK Mahanama & former Timber Corporation Chairman Piyasena Dissanayake released on bail by Court.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி, கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரஜையொருவரிடமிருந்தே இவர்கள் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்துள்ளனர். குறித்த விசாரணை தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
SHARE:

0 comments: