Monday, September 17, 2018

மீண்டும் வெளியாகிறது 'பியார் பிரேமா காதல்', ஆனால் இம்முறை

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலரினை இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரன்ஜீவி இன்று வெளியிடுகின்றார்!

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெள்ளியாகி இளைஞர்களின் பாராட்டுகளை பெற்ற திரைப்படம் பியார் பிரேமா காதல். முழுக்க முழுக்க காதலை களமாக கொண்ட இத்திரைப்படத்தினை இயக்குநர் இளன் இயக்கினார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்தார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்னதாகவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை தூண்டியது. 

இளசுகள் மத்தியில் பெரும் எதிரப்பார்ப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகிய வெற்றிக் கண்டது. இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இப்படத்தினை தொலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர், அதற்கான வேலைகளில் முழுவீச்சில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு வெர்ஷரன் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளதாகவும், இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
SHARE:

0 comments: