Tuesday, September 18, 2018

இணையத்தில் வைரலாகி வரும் 'விஸ்வாசம்' புகைப்படங்கள்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இயக்குனர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வெளியான வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இக்கூட்டணி நான்கவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 

இத்திரைப்படத்தினைசத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்க, அஜித், நயன்தாராவுடன் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பல நடித்து வருகிறார்கள்.

முன்னதாக இத்திரைப்படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

முன்னதாக வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டரில் பொங்கல் 2019 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது!

SHARE:

0 comments: