Tuesday, September 4, 2018

படிப்பிற்காக சீருடையில் மீன் விற்ற கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

கொச்சியில் கல்லூரி படிப்பு செலவிற்காக சீருடையில் மீன் விற்று பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஹனான் நேற்று கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கொச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான் (22). இவர் தொடுபுழாவில் ஒரு கல்லூரியல் 3ம் ஆண்டு வேதியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். தனது படிப்பு செலவிற்காக மாலை நேரங்களில் சீருடையில் மீன் விற்பனை செய்து வந்தார். 

இதுகுறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவருக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்தனர். ஹனான் படிப்பிற்கு இடையே மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நேற்று காலை காரில் கொச்சிக்கு புறப்பட்டார்.

அப்போது ஒருவர் காரின் குறுக்கே பாய்ந்தார். டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பினார். அப்போது கார், மின் கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் காலிலும், முதுகெலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட உடன் ஹனான் கொடுங்கல்லூர் தனியார் மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் புகுந்து மருத்துவர் அனுமதி பெறாமல் பேஸ்புக்கில் ஹனானை லைவாக காட்ட தொடங்கினார். அந்த வாலிபர் கொடுங்கல்லூரை சேர்ந்த சேகர் என்று தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
SHARE:

0 comments: